தள்ளிப்போன விஜய்யின் தலைவா வெளியீடு
விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள, கிட்டத்தட்ட அரசியல் படம் என்று வர்ணிக்கப்படுகிற தலைவாவின் ரிலீஸ் தேதி எதுவென்பதில் இன்னும் குழப்பம் நீங்கியபாடில்லை.
இந்தப் படம் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாகப் போவதாக ஆரம்பத்தலிருந்து கூறி வந்தனர். வெளிநாடுகளில் திரையிடும் விநியோகஸ்தர்களும் ஆகஸ்ட் 9-ம் தேதி படம் வெளியீடு என விளம்பரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
ஐங்கரன் நிறுவனம் வெளிநாட்டு தியேட்டர் லிஸ்டைக் கூட வெளியிட்டுவிட்டது.
இந்த நிலையில் படத்தை ஆகஸ்ட் 15 அல்லது 22-ம் தேதி வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது வெளிநாட்டு விநியோகஸ்தர்களைக் குழப்பியுள்ளது.
விஜய்யின் பிறந்த நாள் விழா சமீபத்தில் திடீரென ரத்தானது நினைவிருக்கலாம். படத்துக்கு அதுபோல ஏதாவது தடை வந்துவிடுமோ என்ற தவிப்பு விஜய் ரசிகர்களுக்கு வர ஆரம்பித்துள்ளது, இந்த தள்ளிப் போடல் காரணமாக..........

No comments:
Post a Comment